மேற்கு வங்கத்தை குஜராத் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது – மம்தா பானர்ஜி!

428

கொல்கத்தா (24 டிச 2020): மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மற்றும் பாஜக மீது கடுமையாக சாடிய மம்தா  “நாங்கள் எங்கள் மண்ணை மதிக்கிறோம். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை.  குஜராத் ஆக  மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற வாரம் மேற்கு வங்கம்  வந்தபோது திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதைப் படிச்சீங்களா?:  முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

இந்த நிலையில்  மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராக சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்  “திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியில் மேற்கு வங்கம் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய குற்ற பதிவு பணியகத்தின் கூற்றுப்படி,  மேற்கு வங்கத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன.  மேலும்  மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுக்கு “பாதுகாப்பான நகரம்” என்ற பெயரும்  இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. என்று மம்தா தெரிவித்துள்ளார்.