புஷ்பா திரைப்பட ஸ்டைலில் படுகொலை – சிறுவர்கள் அரங்கேற்றிய பயங்கரம்!

286

புதுடெல்லி (21 ஜன 2022): டெல்லியில் புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்த 3 சிறுவர்கள் அதே முறையில் 24 வயது இளைஞனை குத்திக் கொலை செய்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவர்கள் பிரபலம் அடைய அந்த இளைஞன் கொல்லப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிரவும் முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்து இந்தக் குற்றத்தைச் செய்யததாக காவல்துறையிடம் அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞரை மூன்று பேர் கொன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இந்த கொலை செய்யப்பட்டதை உறுதி படுத்தியுள்ளது. இந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.