மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!

1406

புதுடெல்லி (01 நவ 2021): உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக மன்மோகன் சிங் கடந்த 13ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங்குக்கு இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

இந்நிலையில் 18 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்துஅவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

மன்மோகன் சிங். ஏப்ரல் மாதம், கோவிட் பாசிட்டிவ் ஆகி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.