மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

Share this News:

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மணமகன் வீட்டாருக்கும், மணமகள் வீட்டாருக்கும் இடையே சூடான வாதங்கள் நடந்தன. இதில் போலீஸ் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முடிவெடுத்தது. எனினும் இருதரப்பினரும் பேசி பிரச்சனை தீர்க்கப்பட்டதோடு, திருமணமும் தடை பட்டது.

மணமகளின் முடிவைப் பற்றி, அவரது தந்தை, கூறுகையில், ‘என் மகளின் உணர்வுகளை மதிக்காத ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது” என்று கூறினார்.


Share this News:

Leave a Reply