வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம் – மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஒப்புதல்!

211
ECI
ECI

புதுடெல்லி (05 ஜன 2021): தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள். மின்னஞ்சல் மூலம் வாக்களிக்க வெளிவிவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கும் கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், இதுகுறித்தது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் வெளிநாட்டினர் அமைப்புகள் உட்பட அனைவருடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களின் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஆதரவாக வெளியுறவு அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது வரும் தேர்தல்களில் வெளிநாட்டவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும்

இதைப் படிச்சீங்களா?:  ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல - நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

தற்போது, ​​பாதுகாப்புப் படைகள் உட்பட பல்வேறு அரசு சேவைகளில் ஈடுபடுவோருக்கு இ-தபால் வாக்குப்பதிவு முறை உள்ளது. அதனடிப்படையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.