கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்குப் பக்க விளைவுகள்!

புதுடெல்லி (17 ஜன 2021): டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செயல்படுத்தத் தொடங்கியது. இதுவரை மொத்தம் 1,65,714 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

அதேவேளை கோவிட் தடுப்பூசியால் சிறிய பக்க விளைவுகள் இயற்கையானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடந்த சம்பவத்திற்குத் தொழில்நுட்ப குறைபாடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சுகாதார ஊழியர்களின் அறிவுரைகளைச் செவிசாய்க்க வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் - முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்...

யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற...

ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள்...