முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை நூர்பூரில் சிலருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களைக் மீட்டு அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜாபர் இறந்துவிட்டார் படுகாயம் அடைந்த நூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்றார்.

“இரண்டு சகோதரர்களும் ஏதோ ஒரு காதல் விவகாரம் தொடர்பாக நூர்பூரில் உள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளனர், கிராம மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடியபோது, ​​அவர்கள் கையிலிருந்து திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அவர்களை அடித்துள்ளனர் . அதேவேளை இச்சம்பவத்தை வகுப்புவாதத்துடன் இணைத்துப் பேசப்படுவதை காவல்துறையினர் நிராகரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஹாட் நியூஸ்: