மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தர தடுப்பூசி நிறுவனம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (24 மே 2021): மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக பஞ்சாப் அரசுக்கு தர மாடர்னா தடுப்பூசி மறுத்துவிட்டது, அதேவேளை , இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது.

வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திட்டமிட்டார்.

இதற்காக உலகளாவிய டெண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற தடுப்பூசியை பெறுவதற்கு பலவகை வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் மாடர்னா நிறுவனம் மட்டும் பதிலளித்துள்ளது. அவர்களும் சாதகமான பதிலளிக்கவில்லை. உலகம் முழுவதும் 9 கோடி மக்களுக்கு மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசுடன் ஒப்பந்தம் போட தங்கள் கொள்கையில் இடமில்லை, இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது.


Share this News:

Leave a Reply