போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு!

358

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளில் தொடரும் நிலையில் பாஜக உயர் மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைப் படிச்சீங்களா?:  போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் - பாஜக எம்பி குற்றச்சாட்டு!

டெல்லியின் வாயில் மூடப்பட்டுள்ளதாலும் விவசாயிகளின் நீடித்த வேலைநிறுத்தத்தாலும் டெல்லியில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை

முன்னதாக அமித் ஷா முன்வைத்த நிபந்தனைகளை விவசாயிகள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.