பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்!

15729

புதுடெல்லி (29 பிப் 2020): பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

சுபாங்கர் சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை சான்றிதழ் குறித்து கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், “பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை. காரணம் அவர் பிறப்பிலேயே இந்தியர்” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது..

மேலும் பிரதமரின் ஆலோசகர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்திய குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3 ன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன். பதிவு செய்வதன் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை. எனவே அவர் பிறப்பாலே இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுகிறார்” என்று பதிலளித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.