நடிகை குணமடைய மோடி பிரார்த்தனை!

புதுடெல்லி (19 ஜன 2020): கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை சபானா ஆஸ்மி குணமடைய பிரதமர் மோடி பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி சனிக்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இருந்து மும்பை – புனே விரைவு சாலையில் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். காலாப்பூர் பகுதியில் சென்றுக்கொண்டு இருக்கும் போது லாரி ஒன்றின் கார் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதில் ஷபானா ஆஸ்மி படுகாயமடைந்தார். தலையில் காயங்கள், கழுத்து, வாய் முதுகெலும்பு, முகம் மற்றும் வலது கண் உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது ஷபனா ஆஸ்மியின் உல்ட நிலை சீராக உள்ளது. மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு, அனில் கபூர், தபு மற்றும் அனில் அம்பானி உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில், சாலை விபத்தில் படுகாயமடைந்த பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விபத்தில் ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்துள்ள செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்: