மளிகை வாங்க அனுப்பினேன் மனைவி வாங்கி வந்தான் – மகன் மீது தாய் புகார்!

Share this News:

புதுடெல்லி (30 ஏப் 2020): மளிகை வாங்க அனுப்பிய மகன் மனைவியுடன் திரும்பி வந்ததாக தாய் ஒருவர் உத்திர பிரதேசம் சாஹிபாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையி உத்திர பிரதேசம் காசியாபாத் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி உள்ளதால் குட்டு என்பவரை அவரது தாயார் மளிகை பொருட்கள் வாங்க மகனை கடைக்கு அனுப்பினார்.

ஆனால் சில மணி நேரங்களில் மகன் பெண் ஒருவருடன் வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை ஏற்க மறுத்த தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வித்தியாசமான இந்த புகாரை விசாரித்த போலீசாரிடம் மகன் குட்டு தெரிவித்ததாவது:

“எனக்கும், சவிதா என்ற பெண்ணுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே ஹரித்வாரில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடித்ததற்கான ஆவணங்கள் என் கைக்கு வரவில்லை. ஊரடங்கு பிரச்னையால் ஹரித்வாருக்கு சென்று ஆவணங்களை வாங்க முடியவில்லை. அதனால் டெல்லியில் வாடகை வீட்டில் எனது மனைவியை தங்க வைத்தேன். ஆனால் ஊரடங்கு நேரத்தில் யாரும் தங்கக்கூடாது என்று அந்த வீட்டு உரிமையாளரும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் மனைவியை தங்க வைக்க வேறு இடம் கிடைக்காததால், மளிகை பொருட்கள் வாங்க சென்ற நேரத்தை பயன்படுத்தி, மனைவியை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன்.” என்று அவர் கூறினார்.

இருவரையும் வீட்டில் தங்க வைக்க குட்டுவின் தாய் அனுமதிக்காததால், ஊரடங்கு முடியும் வரை சவிதா தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே இருவரும் தங்க அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளரிடம் சாஹிபாபாத் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Share this News: