முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்!

காசர்கோடு (18 பிப் 2020): கேரளாவில் முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

கேரளாவின் காசர்கோடு பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் பெற்றோர் சிறு வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். அனாதையாக இருந்த ராஜேஸ்வரியை, அப்துல்லா, கதீஜா தம்பதிகள் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அப்துல்லா, கதீஜா தம்பதிகள் விஷ்ணு பிரசாத் என்பவருக்கு கேரளாவின் காசர்கோடு பகவதி கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அப்துல்லா கதீஜா தம்பதியினருக்கு ஷமீம், நஜீப் மற்றும் ஷரீப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது மற்றும் ஒரு மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.

ஹாட் நியூஸ்:

மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...

புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய "தி துபாய் மால்" அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங்...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி...