ஹிஜாப் தடையால் தேர்வை புறக்கணித்த கல்லூரி மாணவிகள்!

Share this News:

உடுப்பி (31 மார்ச் 2022): ஹிஜாப் தடை காரணமாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

மார்ச் 15 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளி கல்லுரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. மேலும் ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. கல்வி நிறுவனங்களில் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் மார்ச் 24 அன்று, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வரும் வரை காத்திருக்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.


Share this News:

Leave a Reply