ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது தாக்குதல்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அல்காபூர் எக்ஸ் ரோட்டில் இருந்து ஒரு பயணியை அழைத்து வருவதற்காக செய்யத் லத்தீப் என்ற யூபர் ஓட்டுநர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அவருடைய வாகனத்தை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட வலியுறுத்தியது.

ஆனால் செய்யத் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் சமாளித்துக் கொண்டு வாகனத்தை வேகமாக ஓட்டினார். எனினும் அந்த கும்பல் மோட்டர் சைக்கிளில் செய்யதின் வாகனத்தை துரத்திப் பிடித்து நிறுத்தி செய்யதை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் கற்கள் மூலம் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

அதிகாலை 03:45க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. செய்யத் 100 க்கு டயல் செய்து போலீசை அழைத்துள்ளார். எனினும் உதவிக்கு போலீஸ் வரவில்லை என கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்: