Home இந்தியா ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

பாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் அவ்வாறு கூறாவிட்டால் உன்னை வெட்டுவோம் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த முஹம்மது இஸ்ரேல் மோதிஹரி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

இதுகுறித்து மெஹ்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் தரப்பில் அளித்துள்ள புகாரில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் 7 பேர் அடங்கிய கும்பல் என்றும் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

முஹம்மது இஸ்ரேல் கழுத்தில் கத்தியால் கீறிய காயங்களும் உள்ளன. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

கொரோனா பரவலை தடுக்க ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையுடன் போராடி வரும் சூழலில் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாகும்.

உங்களுடன் வாசிப்பவர்கள்

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...

ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

பெங்களூரு (01 டிச 2022): கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை தொடர்ந்து அங்கு முஸ்லிம் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகளை நிறுவ கர்நாடக வக்ஃப் வாரியம்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...