ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடைகள் அடைப்பு!

Share this News:

பெங்களூரு (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் ஹிஜாப் தடையை உறுதி படுத்தும் வகையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிவது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும் கூறி செவ்வாயன்று தனது தீர்ப்பை அறிவித்தது. இது முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இத்தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமை பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் பல பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த பல பெண்கள் வகுப்புகளுக்குச் செல்வதற்கு முன்பு கல்விக் கூடங்களில் அதை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தலையில் முக்காடு போட்டு வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முஸ்லிம்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply