உத்திர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்களை குறி வைக்கும் சட்டம்!

Share this News:

புதுடெல்லி (27 டிச 2020): உத்தரபிரதேசத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச அரசு முஸ்லிம்களை குறி வைத்து மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.

சர்ச்சைக்குரிய மதமாற்று தடை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில், 35 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் டஜன் கணக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன . சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாளே முஸ்லிம்களின் கைதுகள் தொடங்கிவிட்டன.

சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இல்லா நீதிமன்றம் தலையிட்டு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நதீமை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதேபோல், மொராதாபாத் சி.ஜே.எம் நீதிமன்றமும் இருவரை விடுவிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில், ‘லவ் ஜிஹாத்’ தடுப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்து புதிய மசோதாவை மத்திய பிரதேச அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய பிரதேச மத சுதந்திர மசோதா 2020 க்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாளை தொடங்கும் மூன்று நாள் சட்டசபை கூட்டத்திற்கு முன்னதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய மசோதா திருமணத்திற்காக மதம் மாறுவது, அல்லது கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவது ஆகியவை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும். முன்மொழியப்பட்ட சட்டம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கட்டாயமாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் ரூ .25,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. எனினும் இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply