பொய் செய்தியை வைத்து உமர் அப்துல்லா மீது பழி சுமத்திய மோடி – சீதாராம் யெச்சூரி பகீர் தகவல்!

Share this News:

புதுடெல்லி (08 பிப் 2020): இணையத்தில் வந்த பொய் தகவலை வைத்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது பிரதமர் மோடி பழி சுமத்தியுள்ளார் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளித்த பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் 2 முன்னாள் முதல்வர்கள் மீது குற்றம் சுமத்தினார். , மேலும் உமர் அப்துல்லா கூறியதாக மேற்கோள் காட்டிய கூற்றில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ன் நீக்கம் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய கூற்று அங்கத-நகைச்சுவை இணையதளமான ‘ஃபேக்கிங் நியூஸ்’ (Faking News) என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது’ என்று சீதாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ ‘போலிச் செய்தியின் அடிப்படையில் மோடி அரசு தீங்கான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை உமர் மற்றும் முப்தி மீது பிரயோகப்படுத்தியுள்ளது, இதிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதுவும் இயல்பாக இல்லை என்று தெரிகிறது’ என்று பொலிட்பீரோ அறிக்கை தெரிவிக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’பிரையன் கூறும்போது, மோடி பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு எம்.பி. போலிச் செய்தியின் மூலம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினால் உரிமை மீறல் எழுப்பலாம்’ என்று சூசகமாக தன் ட்விட்டரில் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply