சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

625

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் இறந்திருக்க கூடும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

உயிரிழந்தவர்களின் உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.