லவ் ஜிஹாதிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை – முடிவடையும் வழக்குகள்!

Share this News:

லக்னோ (07 நவ 2020): உத்திர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டில் பதிவான 14 வழக்குகள் எந்த ஆதாரங்களும் இல்லாததால் முடிவுக்கு வருகின்றன.

ஆகஸ்ட் 20 அன்று, யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் நாட்டில் லவ் ஜிஹாத் என்ற வகையில் ஷாலினி என்ற பெண் குறித்த வீடியோவை ட்வீட் செய்தார். ஷாலினியின் தாயாரும், ஷாலினி லவ் ஜிஹாதில் சிக்கியிருப்பதாக புகார் அளித்தார். இதனை அடுத்து உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

முஸ்லீம் அல்லாத சிறுமிகளை திருமணம் செய்து முஸ்லீம் இளைஞர்கள் இஸ்லாமிற்கு மாறினர் என்ற குற்றச்சாட்டுகள் பாஜக-ஆர்எஸ்எஸ் மையங்களில் இருந்து எழத் தொடங்கி நீண்ட நாட்களாகின்றன. அதனால்தான், இந்தியாவில் உள்ள அனைத்து பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் ‘லவ் ஜிஹாதிக்கு’ எதிராக சட்டத்தை கொண்டு வருவதாக வாக்குறுதிகள் அளித்தன. அதனை செயல்படுத்தியும் வருகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லவ் ஜிஹாதில் ஈடுபடுபவர்கள் இறுதி சடங்குகளுக்கு தயாராக வேண்டும் என்று கூறினார். ஆனால் லவ் ஜிஹாத் என்ற பெயரில் உ.பி. போலீசார் விசாரிக்கும் அனைத்து வழக்குகளும் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வருவதாக என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உ.பி.யில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு . முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்த இந்து பெண்கள் குறித்தும், காதலிப்பவர்கள் குறித்தும் விசாரிக்க தொடங்கினர். அதன் அடிப்படையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், யோகியின் ஊடக ஆலோசகர் வெளியிட்ட வீடியோ தவறானது என்றும், உ.பி. காவல்துறை பதிவு செய்த 14 வழக்குகளில் 7 வழக்குகள் விசாரணை ஆதாரங்களின்றி முடிவுக்கு வந்து விட்டதாகவும், மீதமுள்ள வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் என்டிடிவி தெரிவித்துள்ளது.

சிறப்பு விசாரணைக் குழுவின் அதிகாரி விகாஸ் பாண்டே, விசாரணை செய்யப்பட்ட 14 வழக்குகளில் பாதி முடிவுக்கு வந்துவிட்டன. ஏனெனில் “முஸ்லீம் கணவன்மார்கள் மற்றும் இந்து மனைவிகள்” ஒற்றுமையுடன் பரஸ்பர புரிதளுடன் இருப்பதாகவும், அவர்களின் வாழ்க்கை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் கூறினார். பதிவு செய்யப்பட்ட 14 வழக்குகளில், மீதமுள்ள 7 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போது விசாரணையில் உள்ள ஏழு வழக்குகளில் மூன்றில், இரண்டு இளம் பெண்கள் தங்கள் முஸ்லீம் கணவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவோ ​​அல்லது தங்கள் மதத்தை மாற்றவோ கட்டாயப்படுத்தவில்லை என்று றியுள்ளனர் . மூன்றாவது தம்பதியினர் திருமணத்திற்கு முன்பே அறிமுகமாகி பின்னர் திருமணம் செய்து கொண்டனர் என்றும் அக்கம்பக்கத்தினர் சாட்சியமளித்துள்ளனர்.

இவற்றில், கான்பூரைச் சேர்ந்த ஷாலினி யாதவின் வழக்கு லவ் ஜிஹாத் என்ற பெயரில் பரபரப்பாக பேசப்பட்டது. ஷாலினியின் வழக்கை யோகி அரசு லவ் ஜிஹாத்தின் ஆதாரமாக மேற்கோளிட்டு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

ஷாலினியின் தாய் போலீசில் அளித்த புகாரில் . கான்பூருக்கு அருகிலுள்ள ஜூஹி காலனியைச் சேர்ந்த முஹம்மது பைசல் என்ற இளைஞன் தனது மகளை துப்பாக்கி முனையில் கடத்தி பின்னர் இஸ்லாமிற்கு மாறியதாகவும், பாலியல் தொழிலாளியாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும்,அந்த தாய் புகார் கூறினார்.

தனது தாயின் புகார் வெளிவந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, தான் இஸ்லாமிற்கு மாறிவிட்டதாகவும், தனது சொந்த விருப்பத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டதாகவும் விளக்கும் வீடியோவுடன் ஷாலினியின் வீடியோ வைரலானது.

டெல்லி அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஷாலினியின் வழக்கு நடைபெற்றபோது, என்னை யாரும் கட்டாய படுத்தவில்லை என்றும் விரும்பியே இஸ்லாமிற்கு மாறியதாகவும் ஷாலினி விளக்கம் அளித்தார்.

ஆனால், ஷாலினியின் தாயார் சதருபா யாதவ், தனது மகளின் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு சதி இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.. ஆனால் அவருடைய கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை.

ஆனால் ஷாலினி, “நான் சிறு குழந்தையா? நான் எம்பிஏ முடித்துள்ளேன், நான் கடத்தப்பட்டேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? என நீதிபதியிடம் தெரிவித்தார்.

காவல்துறையினர் பதிவு செய்த மற்றொரு வழக்கு ஏக்தா வர்மா. ஏக்தா முஹ்சின் என்ற இளைஞரை மணந்தார். முஹ்சினும் ஜூஹி காலனியில் வசிப்பவர். இதுவும் ஷாலினி வழக்கைப் போன்று நிலுவையில் உள்ளது. காரணம் ஏக்தா குடும்பத்தினருக்கு பஜ்ரங்தள் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கு இழுபறியில் உள்ளது.


Share this News:

Leave a Reply