லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (05 பிப் 2020): லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் இல்லை அதைபோல் துக்டே துக்டே கேங்க் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

‘துக்டே துக்டே கேங்க்’ என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

இதற்கு உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் ‘அது தொடர்பான தகவல் ஏதும் இல்லை’ என, தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், லவ் ஜிஹாத் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அப்படி எதுவும் சட்டத்தின் கீழ் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

லவ் ஜிகாத் நிகழ்வுகள், கேரளாவில் அதிகம் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், கேரளாவில் லவ் ஜிகாத் வழக்குகள் இல்லை என்று கேரளா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல லவ் ஜிஹாத் என்ற வார்த்தையும் இல்லை என பதில் அளித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): "சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்" என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய...