தந்தையின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: எஸ்.ஏ.ஆர்.கிலானியின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

புதுடெல்லி (24 ஜூலை 2021): பெகாசஸசை பயன்படுத்தி எஸ்.ஏ.ஆர். கிலானியின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கிலானியின் மக்கள் நுஸ்ரத் கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களின் தொலைபேசி பெகாஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எஸ்.ஏ.ஆர். கிலானியின் உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஆறது மகள் நுஸ்ரத் கிலானி, தெரிவித்துள்ளார். இவை கடத்த 2017 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை நடந்ததாக நுஸ்ரத் தெரிவித்துள்ளார்.

மேலும், ” எனது தந்தை இறக்கவில்லை என்றால் அவரை மற்றொரு மோசடி வழக்கில் சிக்க வைக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொலைபேசி பல முறை ஹேக் செய்யப்பட்டது. தந்தையே இதை பலமுறை அனுபவித்துள்ளார். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், எனது தந்தை தொடர்ந்து பின் தொடரப்பட்டார்.” என்றார்.

மேலும் எனது தந்தை போலி என்கவுண்டர் அவரைக் கொல்லக்கூடும் என்று எனது தந்தை அஞ்சினார். அவர் கைது செய்யப்படலாம் என்றும் எங்கள் உறவினர்களிடம் கிலானி கூறியதாக ஜீலானியின் மகள் நுஸ்ரத் கிலானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply