இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

295

புதுடெல்லி (05 டிச 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. எனினும் இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கர்நாடகா, குஜாரத், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் ஒமிக்ரான் பரவி வருகிறது.

இந்த நிலையில், இன்று மாகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கு மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.