தேசபக்தி குறித்த கேள்வி – அதிருப்தி அடைந்த உவைஸி நியூஸ் சேனல்கள் மீது பாய்ச்சல்!

Share this News:

ஐதராபாத் (08 டிச 2020): டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஏஎம்ஐஎம் தலைவர் அசாதுத்தின் உவைஸியின் தேசபக்தி குறித்து, நெறியாளர் கேட்ட கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஜ்தக் செய்திச் சேனல் நடத்திய சமீபத்திய விவாத கிளிப் தவறான விமர்சனங்களுடன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி மற்றும் எய்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோருக்கு இடையே பரபரப்பான விவாதங்களுக்கு இடையே, செய்தி தொகுப்பாளரும் நடுவருமான அஞ்சனா ஓம் காஷ்யப் தனது தேசபக்தியை நிரூபிக்குமாறு ஒவைசியிடம் கேட்டார்.

ஓவைசி அந்த கேள்விக்கு மிகவும் அதிருப்தி அடைந்தார். அவருடைய பதிலும் அதனையே பிரதிபலித்தது. ஒவைசி தன்னிடம் நிரூபிக்க எதுவும் இல்லை என்று நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்தார். இது இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது

ஓவைசி போன்ற ஒரு தலைவர்களிடம் இதுபோன்ற கேள்வியைக் கேட்பது இது முதல் தடவை அல்ல. பிற்போக்கு செய்தி சேனல்கள் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் இதே போன்ற கேள்விகளை பலமுறை எழுப்பியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய சேனல்களில் நச்சு மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களையே அதிகம் விவாதிக்கின்றன. செய்தி என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply