அசாதுதீன் ஒவைசிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

Share this News:

புதுடெல்லி (16 மார்ச் 2022): அசாதுதீன் ஒவைசிக்கு “ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது லோக்மத் குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் எட்டு வெவ்வேறு பிரிவுகளில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து தலா நான்கு) சிறந்த பங்களிப்புக்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூரி குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பங்களிப்பை ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்தது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விருது வழங்கும் விழாவை இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “லோக்மத் நாடாளுமன்ற விருது குழுவால் ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருதை நான் பெற்றுள்ளேன். இந்த கௌரவத்திற்காக லோக்மத் குழுவிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டிலும் இதே கௌரவம் ஒவைசிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply