பாபா ராம்தேவின் நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு வழங்கப்பட ஹலால் சான்றிதழ்!

Share this News:

புதுடெல்லி (31 மார்ச் 2022): ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலியின் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது பதஞ்சலிக்கும் அதன் தயாரிப்புகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டில், யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலிக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட) சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹிஜாப் தடை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் கோயில் வளாகங்களில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘ஹலால்’ இறைச்சி மற்றும் அதன் பொருட்களைப் புறக்கணிக்கக் கேட்டு கடுமையான இந்துத்வாவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்தான் பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவன பொருட்களுக்கு ‘ஜம்மியத்துல் உலமா ஹிந்த்’ வழங்கிய ஹலால் சான்றிதழ் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹலால் என்பது குர்ஆனில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இஸ்லாமிய சட்டத்திற்கு இணங்க, அனுமதிக்கப்பட்டதற்கான அரபு வார்த்தையாகும். உணவுப் பொருட்கள், இறைச்சிப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், மருந்துகள், தொடர்பாக இந்தச் சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


Share this News:

Leave a Reply