கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

Share this News:

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது.

திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின் சேவை அமைப்பான ‘பீப்பிள்ஸ் ஃபவுண்டேசன்’ சார்பில் ரூ 2 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வயநாடு எம்.பி ராகுல் காந்தி ஜூன் 13 ஆம் தேதி வீடியோ காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் தேசிய தலைவர் சையத் சதத்துல்லா ஹஸ்னி தலைமை ஏற்கிறார்.

அனைத்து சமூக மக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிக்கு ‘மக்களின் கிராமம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் அருகில், நர்ஸரி பள்ளி ஒன்றும், சுகாதார மையம், நூலகம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதமே வீடுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வீடுகள் திறக்கும் நிகழ்வு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.


Share this News: