ஷஹீன்பாக் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்று தெரிந்தது!

682

புதுடெல்லி (01 பிப் 2020): டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்ற அடையாளம் தெரிந்தது.

டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவன் 25 வயது கபில் குஜ்ஜார் என்று அடையாளம் தெரிந்தது. அவன் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடனும், இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றம் கத்தியபயே துப்பாக்கியால் சுட்டுள்ளான். இவை அனைத்தையும் டெல்லி போலீஸ் அருகில் இருந்தபடியே செய்துள்ளான்.

இதைப் படிச்சீங்களா?:  சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

ஷஹீன் பாக்கில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பெண்கள், குழந்தைகள் என அமைதி வழியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டெல்லியில் கடந்த இரண்டு தினங்களில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும்.