மோடி இந்த முறையாவது தொகையை மாற்றி கூறியிருக்கலாம் – எதிர் கட்சிகள் விமர்சனம்!

899

புதுடெல்லி (16 ஆக 2021): பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளாக ஒரே உரையை நிகழ்த்தி வருவதாகவும், திட்டங்களை அறிவிப்பதைத் தவிர அதை செயல்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கட்கே தெரிவிக்கையில், “மோடி திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட யாருக்கும் எதுவும் செய்யவிலை.மோடி நிறைய விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் எதுவும் உறுதியாக நிற்கவில்லை” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், ” பிரதமரால் அறிவிக்கப்பட்ட 100 லட்சம் கோடி திட்டம் . கடந்த இரண்டு ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகின்றன ஆகஸ்ட் 15, 2019 அன்று இதே திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. 2020 இல் மீண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த முறையாவது இந்தத் தொகையை மாற்றியிருக்கலாம்,” என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது - குஜராத் அரசு!

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை வழங்குவதில் பிரதமர் தோல்வி அடைந்துவிட்டார்”. என்றார்.