அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Share this News:

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு 5 மாநிலங்களிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் மத்திய சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து மாவட்ட மற்றும் நகர அளவில் படுக்கைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Share this News: