அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

293

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம் மத அறிஞர் கைது - மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.