உச்ச நீதிமன்ற அழுத்தத்திற்கு பிறகு மோடியின் அறிவிப்பில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): மாநில அரசுகள் தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய தேவையில்லை, தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய அரசே முடிவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில் கூறி உள்ளதாவது:

இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவில் 7 நிறுனங்கள் ஈடுபட்டு உள்ளன. உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி பெற்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும். தடுப்பூசி கொள்கையில் தளர்வு வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. அதனை ஒன்றிய அரசு ஏற்று கொண்டு உள்ளது.

தடுப்பூசி வினியோகத்தில் இனி ஒன்றிய அரசே முடிவெடுக்கும். தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்கு செலவு செய்ய தேவையில்லை.

தடுப்பூசி திட்டத்திற்காக 75 சதவீத தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும். மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் ஒன்றிய அரசே ஏற்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம். 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஒன்றியஅரசு இலவசமாக வழங்கும். ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியைஒன்றிய அரசு இலவசமாக வழங்க துவங்கும். அதேபோல், மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசிகள் கொள்முதல் செய்யத் தேவையில்லை. ஏழைகள், நடுத்தர மற்றும் மத்திய தர மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் மாதம் தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 80 கோடி பேர் பயன்பெறுவர் இவ்வாறு அவர் பேசினார்.

ஹாட் நியூஸ்:

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், "நில அதிர்வு எதுவும்...

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை!

அபுதாபி (23 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா விவகாரங்களில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக ஆன்லைன் மூலம், ஸ்மார்ட் விசா மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்...