டெல்லி சிறையில் வாடிய கர்ப்பிணி மாணவி சஃபூரா ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): டெல்லி திகார் சிறையில் வாடிய அப்பாவி கர்ப்பிணி பெண் சபூராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் சமூகவியலில் ஆய்வு அறிஞரான 27 வயதான ஸர்கர், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 10 ஆம் தேதி, போக்குவரத்தைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை பெற்ற பின்னர், மீண்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி இறுதியில் டெல்லியைச் டெல்லியில் நடந்த வன்முறையில் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்

இந்நிலையில் அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய் அன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை டெல்லி கலவரத்திற்கு வித்திட்ட பாஜக தலைவர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பாயாதது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: