மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

999

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார்.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது.

“இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள், முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல், புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.