ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

428

புதுடெல்லி (20 ஏப் 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.