நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!

Share this News:

புதுடெல்லி (27 மே 2020): கொரோனா பரவல் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி முக்கிய வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் ஹார்வோர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் அஷீஷ் ஷாவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து குறித்து ராகுல் காந்தியிடம் பேசிய அஷீஷ் ஷா, கொரோனா தடுப்பில் மூன்று தடுப்பு மருந்துகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவை சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கும் மருந்தாகும்.

இவற்றில் மூன்றோ அல்லது ஒன்றோ தடுப்பு மருந்தாக வர வாய்ப்பு உள்ளதாக அஷீஷ் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இவை அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என்றும் இந்தியா இவற்றில் கவனம் செலுத்தி இந்திய மக்களுக்கு கிடைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அஷீஷ் ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் அமெரிக்கா, சீனா இடையே அதிகார சமநிலையில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Share this News: