மோடியை புகழும் சீனா – சந்தேகம் கிளப்பும் ராகுல் காந்தி!

476

புதுடெல்லி (22 ஜூன் 2020): இந்திய வீரர்களை கொலை செய்துவிட்டு, இந்திய இடத்தையும் கைபற்றிக் கொண்டு, இந்திய பிரதமரை சீனா பாராட்டியுள்ளது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தயார் படுத்தப்பட்டுள்ள்ன.

இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, நமது வீரர்களை கொன்றதுடன், நம் நிலத்தை அபகரிக்கும் சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.