இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

Share this News:

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உள்ளிட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சீன ராணுவத்திலும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், சீன ராணுவத்தை சேர்ந்த எத்தனை வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்நாட்டு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்த பிரச்சனை காரணமாக முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் லடாக் எல்லைப்பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Share this News: