நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

468

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

இன்று ட்விட்டரில் பிரதமரை விமர்சித்துள்ள ராகுல் காந்தி “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று விமர்சனம் செய்துள்ளார்.

நேற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் இந்திய நிலப்பகுதியை சீன ஆக்கிரமிப்பிற்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் ஏன் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.