வெற்று பேச்சு அவசியமில்லை தீர்வென்ன? – ராகுல் காந்தி சாடல்!

391

புதுடெல்லி (22 ஏப் 2021): கொரோனா தொற்று காரணமாக, தனது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் கையாலாகாத தனத்தை சாடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அதில் , ” நான் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். நாடு முழுவதும் இருந்து வரும் அதிர்ச்சிகரமான செய்திகளை பார்த்து வருகிறேன். கொரோனா வைரசால் மட்டுமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று பேச்சுகளும், பயனில்லாத விழாக்களும் தேவையில்லை. இந்தியாவிற்கு, தீர்வு தான் உடனடி தேவை. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.