கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

Share this News:

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, இரண்டாவதாக பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது ராஜஸ்தானிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பாஜக தலைவர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சிஏஏவுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply