குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.

வரும் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத் தொடரின் முதல்நாள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மூன்றாவது மாநிலமாக ராஜாஸ்தான் இடம்பெறும்.

ஹாட் நியூஸ்:

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி...

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...