இந்தியாவில் சரியும் கொரோனா தொற்று!

266
CORONA-India
CORONA-India

புதுடெல்லி (25 ஜன 2022): இந்தியாவில் இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 22,36,842 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.

இது தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.