மோடி படத்தை தூக்கிவிட்டு மம்தா பானர்ஜியின் படம் – பரபரப்பில் ஒன்றிய அரசு!

Share this News:

கொல்கத்தா (05 ஜூன் 2021): மேற்குவங்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோருக்கு சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தூக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநில அரசு சார்பில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதிக்கப்பட்ட சான்றிதழ்-ஐ மத்திய அரசு விநியோகித்து வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Share this News:

Leave a Reply