என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Share this News:

புதுடெல்லி (13 மார்ச் 2020): என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:-

என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. எனது குடும்பத்தினரிடமும் ஆவணங்கள் கிடையாது.

நான், எனது மனைவி, எனது அமைச்சரவை உறுப்பினர்களிடத்திலும் குடியுரிமையை நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் கிடையாது. நாங்கள் எல்லோரும் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோமா?

இந்த என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply