எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

526

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர்.

எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை செய்யப்பட வழக்கில் ரதீஷ், பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஷான் கொலையில் அவரை நன்கு அறிந்தவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் விசாணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஆதாரங்களின்படி, ரதீஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பிரசாத் என்பது தெரியவந்தது.

இதைப் படிச்சீங்களா?:  தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது - சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

பிரசாத் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, கொலைக்கு ஆள் பிடித்து அவரை வழிநடத்தியவர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதானவர்களிடமிருந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் கைது விரைவில் நடைபெறும். இந்த கொலையில் பாஜக முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாஜக தலைவர் ஒருவரும் ஷான் கொலை செய்யப்பட்ட அடுத்த நாள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.