இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் – பிரகாஷ் ராஜ்பஹர்!

Share this News:

புதுடெல்லி (12 நவ 2021): இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே தவிர முஹம்மது அலி ஜின்னா அல்ல என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் பிரகாஷ் ராஜ்பஹர் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா அல்ல ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பஹர் கூறியுள்ளார்.

முகமது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியிருந்தால் இந்தியா பிளவுபட்டிருக்காது பிரிவினைக்கு ஜின்னா அல்ல ஆர்.எஸ்.எஸ். அமப்பே காரணம். என்று ராஜ்பஹர் தெரிவித்தார்.

பிரிவினைக்கு வழிவகுத்து பிரிவினைகளை துவக்கியவர்கள் சங்க பரிவாரம் அமப்பினரே என்று ராஜ்பஹர் தெரிவித்துள்ளார். பிரிவினை காலத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் ஜின்னாவின் பங்கைப் பாராட்டியதாகவும் ராஜ்பார் கூறினார்.

சர்தார் படேல், தேசப்பிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகிய மூவரும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் இந்தியா சுதந்திரம் பெற உதவினார்கள் என்று ராஜ்பஹர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் சில நாட்களுக்கு முன் ஜின்னாவை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply