ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

Share this News:

புதுடெல்லி (13 அக் 2022): கர்நாடக அரசின் ஹிஜாப் தடை குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனால் கர்நாடக நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த அப்பீலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வு விசாரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (அக்.13) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இரு நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதி சுதான்ஷூ துலியா, ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். குழந்தைகளின் கல்வி என்பது தான் முக்கியம். கர்நாடக அரசின் உத்தரவு ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

நீதிபதி ஹேமந்த் குப்தா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று , அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply