விவசாய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை விசாரணை!

372
Supreme court of India
Supreme court of India

புதுடெல்லி (13 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கவுள்ளது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதில் மெத்தனம் காட்டி வரும் நிலையில் விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இதற்கிடையே போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆக்ரா அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் - பாஜக எம்பி குற்றச்சாட்டு!

போராட்டத்தை மேலும் வலுப்பெறும் நோக்கத்தில் இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்பின் தலைவர்கள் திங்களன்று உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.